கோடானுகோடி கரூப்புப் பணம் எங்கே? யார் இந்த ஹசன் அலி கான்? காங்கிரஸ் ஏன் அமைதியைக் காக்கிறது?

கோடானுகோடி கரூப்புப் பணம் எங்கே? யார் இந்த ஹசன் அலி கான்? காங்கிரஸ் ஏன் அமைதியைக் காக்கிறது?

காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இன்று (25-01-2011) ஏதோ அறிக்கை வெளியிடப்போகிறோம் என்று டாமாரம் அடித்தனர், ஆனால், அந்த அறிக்கையில் ஒரு மண்ணும் இல்லை. ஏற்கெனெவே தெரிந்த விவரங்களை, சப்பைக் கட்டி எழுதியுள்ளது நன்றாகவே தெரிகின்றது[1]. இப்பொழுதுள்ள சட்டதிட்டங்களின் படி, எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்ற அப்பட்ட பொய்யைச் சொல்லி, இந்தியர்களை ஏமாற்றப் பார்க்கின்றனர்[2]. லைசென்ஸ்டெயின்[3] போன்ற குட்டி நாடே, எந்த தகவலையும் தரமுடியாது என்று மறுத்துவிட்டது[4].

மார்ச் 2009: உச்சநீதிமன்றத்தில், நிதியமைச்சகம் சார்பில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்ப்பட்டதில் ரூ.76,000 கோடிகள் ஹசன் அலி என்பவனால் போடப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இவன் நூற்றுக்கணக்கான குதிரைகளை வைத்துக் கொண்டு, குதிரைப்பந்தய சூதாட்டம் நடத்தி வருகிறான். இதைத்தவிர மற்ற சூதாட்டங்கள், சட்டமீறல் காரியங்களை செய்து வருகிறான். ஆனால், அவன் பிடிக்கப்படவில்லை. ஏனெனில், காங்கிரஸுக்கு வேண்டிய ஆள். புனேவில், குதிரை ரேசில் உட்கார்ந்து கொண்டு பணத்தை கொடுப்பதைப் போன்ற காட்சிகள் தில்லி தொலைக்காட்சிகள் காட்டின[5].

ஜனவரி 2011: ருடால்ஃப் எல்மெர் வெளிப்படுத்திய கருப்புப் பணமுதலைகள்: ருடால்ஃப் எல்மெர் என்ற ஸ்விஸ் வங்கி ஊழியர் பில்லியன் கணக்கில் வரியேய்ப்பு செய்து, அதிலிருந்து பெறப்பட்ட, கருப்புப் பணத்தை, பல நாடுகளிலிருந்து, ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்துள்ளார். அவற்றின் விவரங்களை ஒரு சிடியில் பதிவு செய்து, ஜூலியன் அசாஞ், விக்கிலீக் அதிபரிடம் வெளிப்படையாக நடந்த நிகழ்ச்சியில் கொடுத்தார்.

இந்தியாவின் கருப்புப் பணமுதலைகள்:  அவற்றில் இந்தியாவிலிருந்தும் பணம் போட்டவர்களின் விவரங்கள் உள்ளன என்பதை, ருடால்ஃப் எல்மெர் கூறியுள்ளார். குறிப்பாக, ஆஸாத் அலி கான், ஜெஹிதா கான், ஜே. எம். ஐ. ஜிலானி, அன்னபூர்னா குழுமம்[6], என்ற பல பெயர்கள் ஒரு குறிப்பிட்ட கோப்பில் இருக்கின்றன. இதை ஊடகங்கள் காண்பித்து வருகின்றன. குறிப்பாக கேமேன் தீவுகளில் (Cayman islands, Switzerland) உள்ள வங்கிகளில் போடப்பட்டிருப்பதாக வங்கி கணக்கு எண்களுடன் விவரங்கள் உள்ளன. ஆனால், இவர்கள் யார், எவ்வாறு கருப்புப் பணத்தைப் பெற்றனர், எப்படி அது இந்தியாவிலிருந்து வெளியே சென்றது, ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டது முதலிய விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன.

பில்லியன்களில் மோசடி செய்யும் ஹசன் அலி கான்: ஆகஸ்ட் 4, 2009 அன்று பாராளுமன்றத்தில் இவன் ரூ. 50,000 கோடிகள் வரி கட்டாமல் பாக்கி வைத்திருக்கிறான் என்ற தகவலை வெளியிடப் பட்டது. இவன் தாவூத் இப்ராஹிம் கூட்டாளி. ஹவாலா, பணத்தை மாற்றுவது / சலவை செய்வது – கருப்பை வெள்ளையாக்குவது[7] போன்ற காரியங்களில் சம்பாதித்த கருப்புப் பணமான, ரூ . 30,000 கோடிகளை ஸ்விஸ் வங்கிகளில் போட்டுள்ளான்[8]. ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கும் போது, எல்.டி.டி.ஈக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அட்னன் கஸ்ஸோகி என்ற சவுதி அரேபியனுடைய தொடர்பும் வெளிப்பட்டது. ஹஸன் அலி கானின் மேல் ரூ 100 பில்லியன் ஹவாலா வழக்கு ஒன்று ஜனவரி 2007ல், அமுலாக்கப் பிரிவினர் போட்டனர். 2010ல், இவன் கைது செய்யப்பட்டாலும், இன்று வெளியில் உள்ளதாகத் தெரிகிறது. இவனிடத்தில் மூன்று பாஸ்போர்ட்டுகள் உள்ளன., தவிர சண்டிகர் மற்றும் கௌஹாத்தி நகரங்களினின்றும், பாஸ்போர்ட் விண்ணப்பித்துள்ளான். அதற்காக 2008ல் ஒரு வழக்கை பதிவு செய்தனர்[9]. ஆனால், காங்கிரஸுக்கும், இவனுக்கும் உள்ள தொடர்பினால், இவன் மீது கடுமையாக அல்லது, தொடர்ச்சியாக, எந்த நடவடிக்கை, விசாரணை முதலியவற்றை செய்யாமல், ஏனோதானோ என்றுதான் வேலைசெய்கின்றனர். இன்றுதான் (25-01-2011), அவன்மீது நடவடிக்கை எடுப்பதைப் பற்றி யோசிக்கிறோம் என்கிறார், திருவாளர் பிரணாப் குமார் முகர்ஜி!


[3] Liechtenstein is a small country, located entirely within the Alps range of mountains, with a total estimated population of about 35,000. However, it is one of the richest countries in the world and has the highest GDP per person in the world.

[5] டைம்ஸ்-நௌ – 25-01-2011

[6] Annapurna convertible Limited, Annapurna convertible (USD) Limited, Annapurna leverage Limited,

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “கோடானுகோடி கரூப்புப் பணம் எங்கே? யார் இந்த ஹசன் அலி கான்? காங்கிரஸ் ஏன் அமைதியைக் காக்கிறது?”

  1. ஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்! (1) &la Says:

    […] [4] வேதபிரகாஷ், கோடானுகோடி கரூப்புப் பணம் எங்கே? யார் இந்த ஹசன் அலி கான்? காங்கிரஸ் ஏன் அமைதியைக் காக்கிறது?, https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2011/01/25/black-money-deposited-in-sw… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: